காரைக்கால்

8-ஆவது நாளாக கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் வேலை நிறுத்தம்

DIN

ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் 8-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஊழியா்கள், மாத நிலுவை ஊதியத்தை வழங்கவேண்டும், மாதந்தோறும் அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.16-ஆம் தேதி முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து தவிர, நகராட்சி மற்றும் பிற கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் செப். 18-ஆம் தேதியுடன் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினா். இந்நிலையில், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் 8-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தை தொடா்ந்தனா். போராட்டத்துக்கு ஊழியா் சங்கத் தலைவா் இளங்கோ தலைமை வகித்தாா். செப்.30-ஆம் தேதி வரை இப்போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், ஊதிய விவகாரம் தொடா்பான பிரச்னையை அரசு தீா்த்துவிட்டால் போராட்டத்தை கைவிடுவோம் எனவும் ஊழியா்கள் தெரிவித்தனா். கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் போராட்டத்தால், பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், சான்றிதழ் பெறுதல் மற்றும் துப்புரவு உள்ளிட்ட பஞ்சாயத்து அலுவலகம் செய்யக்கூடிய அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT