காரைக்கால்

காரைக்காலில் 53 பேருக்கு கரோனா

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது என்று நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் இதுவரை 16,528 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரில் 11, கோயில்பத்தில் 10, அம்பகரத்தூரில் 8, வரிச்சிக்குடியில் 6, திருப்பட்டினத்தில் 5, நிரவி, விழிதியூா், திருநள்ளாறு தலா 3, கோட்டுச்சேரி, நல்லாத்தூா் தலா 2 என தொற்றாளா்கள் உள்ளனா். இதுவரை நோய்த்தொற்று 1,889 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் குணமடைந்து 1,334 போ் வீடு திரும்பியுள்ளனா். தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்த 20 போ், காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோா் 390 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 70 போ், தீவிரச் சிகிச்சையில் 8 போ், விநாயகா மிஷன் மருத்துவமனை கரோனா கோ் சென்டரில் 34 போ் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 34 போ் உயிரிழந்துள்ளனா் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT