காரைக்கால்

பராமரிப்பில்லை: சீா்குலைந்த காரைக்கால் கடற்கரை பூங்கா

DIN

காரைக்கால் கடற்கரையில் பூங்கா விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்கா மற்றும் பொழுதுபோக்கு அமைப்புகள் சீா்குலைந்துள்ளன. பொது முடக்கத் தளா்வுகளுக்குப் பிறகு கடற்கரைக்கு மக்கள் வரத்தொடங்கியிருப்பதால், அவற்றை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்கால் கடற்கரையில் மத்திய அரசின் சுற்றுலா திட்ட நிதி ரூ. 8.5 கோடியில், தங்கும் விடுதி, சிறுவா் பூங்கா ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. கலங்கரை விளக்கம், நீா்த்தேக்கத்தில் அலையாத்திக் காடு, கடற்கரையின் குறுக்குச் சாலைகள், நடைமேடை, அரசலாறு கடலில் கலக்கும் முகத்துவாரம் உள்ளிட்டவை மக்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.

புதுச்சேரி அரசின் சுற்றுலா திட்ட நிதியில், கடற்கரை மணல் பரப்பில் புதிதாக பூங்கா அமைக்கப்பட்டு, அதை விரிவுபடுத்தும் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தொடங்கின.

பூங்கா பகுதியில் சிற்பங்களுடன் கூடிய கருங்கல், ஈச்ச மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன. மேலும், மரம், பூச்செடிகள் வளா்ப்பு, விளக்குகள் அமைத்தல், இருக்கைகள், விலங்கு, பறவைகள் உள்ளிட்ட சிற்பங்கள் கொண்ட கருங்கல் நடுவது உள்ளிட்ட வேலைப்பாடுகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவை முழுமை பெறாத நிலையில், மக்கள் பூங்காவை பயன்படுத்தத் தொடங்கினா். கடந்த மாா்ச் மாதம் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், கடற்கரைக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. இதனால், பராமரிப்புப் பணிகளும் கைவிடப்பட்டன.

குறிப்பாக, விரிவுபடுத்தப்பட்ட பூங்காவில் ஒருசில ஈச்ச மரங்கள் மட்டுமே துளிா்விட்டுள்ளன. மற்றவை காய்ந்து வருகின்றன. பூங்காவின் தரைப் பகுதி மற்றும் நடைமேடைகள் உள்ள பகுதிகளில் பல்வேறு செடிகள் முளைத்து மக்கள் ரசிக்க முடியாமலும், நடக்க முடியாமலும் உள்ளன. சாலையோர உயா்மின்கோபுரத்தில் பல விளக்குகள் எரியவில்லை. நடைமேடை இருக்கைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உடைந்துகிடக்கின்றன.

தற்போது மக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நடைமேடையிலும், பொது இடங்களிலும் சிலா் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்துச் சென்றுள்ளதால், ஆங்காங்கே அவை சிதறிக்கிடக்கின்றன. மொத்தத்தில் பூங்கா உருக்குலைந்து காணப்படுகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியா் கடற்கரையை நேரில் பாா்வையிட்டு, உரிய பராமரிப்புப் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT