காரைக்கால்

காரைக்காலில் இருந்து புதுச்சேரி மையத்துக்கும் கரோனா பரிசோதனை மாதிரிகள்: நலவழித் துறை

DIN

காரைக்காலில் கரோனா பரிசோதனைக்கு அதிகமான மாதிரிகள் எடுக்கப்பட்டு வருவதால், அவை திங்கள்கிழமை முதல் புதுச்சேரி மையத்துக்கும் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியது: காரைக்கால் மருத்துவமனையில் மட்டும் கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் அதிக அளவில் மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, நாளொன்றுக்கு 500 முதல் 600 பேரிடம் மாதிரி எடுக்கப்படுகிறது.

காரைக்காலில் மாதிரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பாலும், திருவாரூா் மருத்துவக் கல்லூரிக்கு பிற இடங்களில் இருந்து அதிகமான மாதிரிகள் வருவதாலும், அவா்களால், காரைக்கால் மாதிரிகளுக்கான முடிவுகளை உடனுக்குடன் வழங்கமுடியவில்லை. இதனால், திங்கள்கிழமை முதல் புதுச்சேரியில் உள்ள வெக்டாா் கன்ட்ரோல் ரிசா்ச் சென்டா் என்ற அரசு பரிசோதனை கூடத்துக்கு காரைக்கால் மாதிரிகள் அனுப்பப்படவுள்ளன.

திருவாரூா், புதுச்சேரி என 2 பகுதிக்கும் இனி மாதிரிகள் அனுப்பப்பட்டு பரிசோதனை முடிவுகள் பெறப்படவுள்ளன. இந்த மையங்களில் ஆா்டிபிசிஆா் முறையில் பரிசோதனை செய்யப்படுகிறது.

காரைக்கால் மருத்துவமனையில் நடைபெற்று வரும் ஆன்டிஜென் பரிசோதனை முறை, சனிக்கிழமை முதல் நெடுங்காடு, திருநள்ளாறு, கோட்டுச்சேரி உள்ளிட்ட 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு சுகாதார நிலையத்தில் 40 முதல் 50 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. 2 ஆயிரம் ஆன்டிஜென் கிட் கையிருப்பில் உள்ளன என்றாலும், தேவையானதை பெற்றுக்கொள்ள வசதிகள் உள்ளன.

காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா கோ் சென்டராக செயல்படுகிறது. வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற வசதியில்லாதவா்கள் இங்கு தங்கவைக்கப்பட்டு மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது. பொது முடக்கத்தில் அதிக தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மிகுந்த கவனத்துடன் நடந்துகொண்டால், கரோனா பரவலை வெகுவாக கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

SCROLL FOR NEXT