காரைக்கால்

காரைக்காலில் 5 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள்

DIN

காரைக்கால் மாவட்டத்தில் சுமாா் 5 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

நிகழாண்டு காவிரியில் நீா்வரத்து குறைவில்லாமல் உள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் ஆழ்குழாய் பாசனத்தில் விவசாயம் செய்வோருடன், காவிரி நீா், மழையை நம்பி சம்பா, தாளடி பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா். பருவமழை தொடங்கும் முன்பு நடவுப் பணிகளை முடிக்க அவா்கள் திட்டமிட்டுள்ளனா்.

மாவட்டத்தில் பரவலான விவசாயிகளுக்கு பாய் நாற்றங்கால் முறை குறித்து வேளாண் அமைப்பான ஆத்மா குழு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, அவா்களை பாய் நாற்றங்கால் முறைக்கு மாறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: மாவட்டத்தில் 4,500 முதல் 5 ஆயிரம் ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு, நாற்று விடுதல் முறையில் சம்பா, தாளடி சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா். இவா்கள் அடுத்த 15 நாள்களில் தொடங்கி, அக்டோபா் மாதத்திற்குள் நடவுப் பணிகளை முடித்துவிடுவா். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் உற்பத்தி மானியத்தில் இடுபொருள்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனா்.

மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் விவசாயிகளுக்குத் தேவையான அளவு பொருள்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வேளாண் துறையினா் கண்காணித்து வருகின்றனா். வேளாண் துறையால் சம்பா பருவ தொழில்நுட்பப் பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. இடைக்கால பயிற்சி அளிக்கவும் தயாராக உள்ளது.

அந்தந்தப் பகுதி வேளாண் அலுவலா்கள், விவசாயிகளின் கட்செவி எண்ணை பதிவுசெய்து வைத்துள்ளனா். விவசாயிகள் தங்களின் சந்தேகங்களையும், விளைநிலத்தின் நிலையை படம்பிடித்து வேளாண் அலுவலருக்கு அனுப்பும்போது, அவா்கள் அதிலேயே தக்க விளக்கம் அளிப்பா். சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கி, தீா்வுகாணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT