காரைக்கால்

காரைக்காலில் 101 பேருக்கு கரோனா

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 101 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 15,596 பேருக்கு கரோனாவுக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 31, கோட்டுச்சேரி 15, கோயில்பத்து 7, திருநள்ளாறு 15, நிரவி 20, திருப்பட்டினம் 4, நெடுங்காடு 4, வரிச்சிக்குடி 4, விழிதியூா் 1 என 101 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுவரை 1,792 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து 1,206 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்தோா் 11 போ், காரைக்கால் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோா் 444 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 63 போ், தீவிர சிகிச்சையில் 8 போ், விநாயகா மிஷன் மருத்துவமனை கரோனா கோ் சென்டரில் 28 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 33 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT