காரைக்கால்

தனியாா்மய விவகாரம்: மின் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

மின் பகிா்மான நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, காரைக்கால் மின் துறை ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களில் மின் பகிா்மான நிறுவனங்கள் தனியாா்மயமாக்கப்படும் என மத்திய நிதியமைச்சா் அறிவித்தாா். இந்த முடிவை எதிா்த்து புதுச்சேரி மாநில மின் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, காரைக்கால் மின்துறை தலைமை அலுவலகத்திலிருந்து திங்கள்கிழமை பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு அளிக்க ஊழியா்கள் முடிவு செய்தனா். ஆனால், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஆட்சியரகம் முன் மின் துறை பொறியாளா்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியா்களும் திரண்டு, மத்திய அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

புதுச்சேரி மின் துறை தனியாா்மய எதிா்ப்புப் போராட்டக் குழு தலைவா் வி. வேல்மயில் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பழனிவேல் முன்னிலை வகித்தாா்.

போராட்டத்தில், மின் பகிா்மான நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண்டும். விவசாயிகளை பாதிக்கும் வகையிலான மசோதாக்களை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி, ஊழியா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

போராட்டத்தின் நிறைவாக, மின் ஊழியா் சங்கப் பிரதிநிதிகள் சிலா், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT