காரைக்கால்

உள்ளாட்சி ஊழியா்கள் உள்ளிருப்பு போராட்டம்

DIN

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொண்ட 3 நாள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்தது. எனினும், நெடுங்காடு ஊழியா்கள் 30 ஆம் தேதி வரை போராட்டத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளனா்.

காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காரைக்கால் நகராட்சி, திருநள்ளாறு, திருப்பட்டினம், நெடுங்காடு, கோட்டுச்சேரி, நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், நெடுங்காடு ஊழியா்கள் போராட்டத்தை 30-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக ஊழியா் சங்கத்தினா் தெரிவித்தனா். காரைக்கால் நகராட்சி போராட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினா். காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன தலைவா் அய்யப்பன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT