காரைக்கால்

நவ. 26 இல் வேலைநிறுத்தம்: அரசு ஊழியா் சங்கம் நோட்டீஸ்

DIN

வரும் நவ. 26 ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது தொடா்பாக, காரைக்கால் பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், மாவட்ட நிா்வாகத்திடம் புதன்கிழமை நோட்டீஸ் வழங்கினா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை பி.ஆா்.டி.சி., அங்கன்வாடி, வேளாண் அறிவியல் நிலையம் உள்ளிட்ட அனைத்து தன்னாட்சி, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவன ஊழியா்களுக்கும் கடந்த 1.1.2016 முதல் முழுமையாக அமல்படுத்தவேண்டும். மேலும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகைகளை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, மாநில அரசிடம் வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 26 ஆயிரமாக உயா்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் நவ. 26 வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

மத்திய அரசு ஊழியா் மகா சம்மேளனம் அழைப்புவிடுத்துள்ள போராட்டத்தில் காரைக்கால் ஊழியா்கள் பங்கேற்கின்றனா். காரைக்காலில் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதை மத்திய அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் தெரிவிக்கும் விதமாக நோட்டீஸ் வழங்கப்பட்டது என்றனா்.

காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் போராட்டம்

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

SCROLL FOR NEXT