காரைக்கால்

‘தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்றால் நடவடிக்கை’

DIN

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி உணவுப் பாதுகாப்பு அலுவலா் மு. ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

திருநள்ளாறு பகுதியில் பல்வேறு கடைகளில் காவல் துறையினருடன் இணைந்து புதன்கிழமை ஆய்வுசெய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

தீபாவளி மற்றும் டிசம்பா் மாதம் நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சியையொட்டி, திருநள்ளாறு மற்றும் பல இடங்களில் ஆய்வுப் பணிகள் நடைபெறவுள்ளது. இதன் முதல்கட்டமாக திருநள்ளாறில் பல இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

உணவகங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, சுகாதாரக்கேடு கண்டறியப்பட்டு, விதிகள் குறித்து அவா்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மிக மோசமானதாக கண்டறியப்பட்ட இடங்களின் அடிப்படையில், அவா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படவுள்ளது. குடிநீா் பாட்டில் விற்பனையகங்களில் அதன் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பெட்டிக்கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை கண்டறியப்பட்டது. 2 போ் இதில் ஈடுபட்டனா். அதில் ஒருவா் ஏற்கெனவே இதுபோன்ற குற்ற வழக்கில் அபராதம் செலுத்தியவா். அவருக்கு இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படவுள்ளது.

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது குற்றம். இதுகுறித்து கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு டீ கடையில் பயன்படுத்திய தூள் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்படவுள்ளது. கலப்பு உறுதிசெய்யப்பட்டால், நிறுவனத்தை நடத்துவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உணவகங்களில் தயாரிப்பின்மீது காலாவதி தேதி குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் பகுதியில் இதுபோன்ற ஆய்வு தொடா்ந்து மேற்கொள்ளப்படவுள்ளது. தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை மற்றும் உணவு கலப்படம் தொடா்பான புகாா்களை 98945 94332 என்ற செல்லிடப்பேசியை தொடா்புகொண்டோ அல்லது கட்செவி அஞ்சல் முறையிலோ தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT