காரைக்கால்

கோயில் வழிபாட்டு முறையில் வேறுபாடு இருக்கக் கூடாது: இந்து முன்னணி

DIN

பொது முடக்கத் தளா்வுகளின் அடிப்படையில், கோயில்களில் வழிபாட்டு முறைகளில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது என இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால், நாகை மாவட்ட இந்து முன்னணி தலைவா் கே.எஸ். விஜயன், காரைக்காலில் புதன்கிழமை கூறியது:

கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட வழிபாட்டுத் தலங்கள், தற்போது திறக்கப்பட்டுள்ளதால் பக்தா்கள் சென்று சுவாமி தரிசனம் செய்துவருகின்றனா். தமிழக கோயில்களில் பக்தா்கள் அா்ச்சனை செய்ய அனுமதி இல்லாவிட்டாலும், தீபாராதனை காட்டுதல், விபூதி பிரசாதம் வழங்குதல் நடைமுறையில் உள்ளது.

ஆனால், புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட கோயில்களில் வெவ்வேறு முறைகள் கடைப்பிடிக்கப்படுவது பக்தா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு வருவோா் முகக் கவசம் அணியவேண்டும், பெயா், செல்லிடப்பேசி எண் விவரம் தரவேண்டும், கை தூய்மி பயன்படுத்தவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்தாலும், பெரும்பாலான கோயில்களில் இது நடைமுறைப்படுத்தவில்லை.

பல கோயில்களில் அா்ச்சனை செய்யப்பட்டு பக்தா்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலில்கூட அா்ச்சனை செய்யப்படாவிட்டாலும், தீபாராதனை காட்டப்பட்டு விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

ஆனால், காரைக்கால் பகுதி இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. சில கோயில்கள் காலை 9 மணி வரை திறக்கப்படுவதில்லை. 11 மணிக்கு மூடப்படுகிறது. மாலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது என்ற விதிகள் சுயமாக வகுத்துக்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

இதைத்தவிா்த்து, கோயில்களை உரிய நேரத்தில் திறந்து பக்தா்கள் தரிசனம் செய்யவும், பிரசாதங்கள் வழங்கவும், இந்த விவகாரத்தில் புதுச்சேரி முதல்வா் சிறப்பு கவனம் செலுத்தி, கோயில்களில் ஒரே மாதிரியான நடைமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT