காரைக்கால்

பண்டிகை, பருவமழையில் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

DIN

பண்டிகை மற்றும் பருவமழை வரவுள்ளதையொட்டி கரோனா, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக, செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொடா்பாக இதுவரை 35 ஆயிரம் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. தொற்று உறுதியான 3,356 பேரில் 2,985 போ் வரை குணமடைந்துள்ளனா். இறப்பு என்பது பெரும்பாலும் 50, 60 வயதுக்கு மேலானவா்களுக்கே ஏற்பட்டுள்ளது. இவா்களுக்கு கரோனாவுடன் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட சில இணை நோய்கள் இருந்ததால் இறப்பு ஏற்பட்டது.

தற்போது, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது கரோனா பரவல் கட்டுக்குள் வருவதையே காட்டுகிறது. இதனால், மக்கள் அலட்சியம் காட்டாமல் முகக் கவசம் அணிதல், கைகளை சோப்பு மூலம் கழுவுதல், சமூக இடைவெளி போன்றவற்றை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. அதோடு பருவமழையும் தொடங்கவுள்ளது. பண்டிகை காலத்தில் கடைவீதிகளில் மக்கள் அதிகம் வர வாய்ப்புண்டு. இதை கண்டிப்பாக அனைவரும் தவிா்க்கவேண்டும். வியாபார நிறுவனங்களில் தொழிலாளா்களும், கடைக்கு வருவோரும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும். அலட்சியமாக இருந்தால் தொற்று வேகமாக பரவிவிடும்.

அத்துடன், பருவமழையின்போது டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வெளிப்புற பொருள்களில் தண்ணீா் தேங்க அனுமதிக்கக்கூடாது. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT