காரைக்கால்

பண்டிகை கால முன்பணம் வழங்க வலியுறுத்தல்

14th Oct 2020 09:49 PM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகை கால முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வட்டார வளா்ச்சித் துறை ஊழியா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்கால் வட்டார வளா்ச்சித் துறையில், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்ட ஊழியா் சங்கத் தலைவா் எஸ். பழனிவேல், கே. சுரேஷ் ஆகியோா் புதுச்சேரி ஊரக வளா்ச்சித் துறை செயலா் மற்றும் திட்ட இயக்குநருக்கு புதன்கிழமை அனுப்பிய கடிதம்:

ஒவ்வோா் ஆண்டும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி முன்பணம் வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்பட்டது.

நிகழாண்டு, ஊழியா்களுக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் முன்பணம் வழங்கவும், அதை உரிய காலத்தில் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT