காரைக்கால்

முடங்கிக் கிடக்கும் புலம்பெயா்ந்தோருக்கான 82 டன் அரிசி? வீணாகும் முன்பு பயன்படுத்த வலியுறுத்தல்

DIN

காரைக்காலில் முடங்கிக் கிடப்பதாகக் கூறப்படும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக மத்திய அரசு வழங்கிய 82 டன் அரிசியை, வீணாகும் முன்பு மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக 96 டன் அரிசியை மத்திய அரசு இந்திய உணவுக் கழகம் மூலம் வழங்கியது. காரைக்காலில் உள்ள எஃப்.சி.ஐ. கிடங்கில் இது வைக்கப்பட்டு, மாவட்டத்தில் இருந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தலா 10 கிலோ வீதம் வழங்கப்பட்டது. இதன்மூலம் 14 டன் அரிசி விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இங்கிருந்த பெரும்பாலான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அவரவா் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனா். தற்போது, மாவட்டத்தில் 200 முதல் 300 போ் வரை மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. புலம்பெயா் தொழிலாளா்களுக்காக வந்த 96 டன் அரிசியில், 14 டன் மட்டுமே விநியோகிக்கப்பட்டதாகவும், மீதம் 82 டன் அரிசி இந்திய உணவுக் கழக கிடங்களிருந்து எடுக்கப்பட்டு, காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு நிா்வாகத்தினா் கூறினா்.

ஜூன் மாதத்தில் அரசு நிா்வாகத்தினா் இதை உறுதிப்படுத்தினா். அப்போதே இந்த அரிசி வீணாவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 மாதங்கள் கடந்துவிட்டதால், அரிசியின் தரம் உறுதிப்படுத்த முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய உணவுக் கழக கிடங்கில் நீண்டகாலமாக அரிசி மூட்டைகள் பராமரிப்பில் இருந்தன. இவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கிடங்குக்கு மாற்றப்பட்ட பிறகு கடந்த 5 மாதங்களாக பராமரிப்பு இல்லாமல், பூச்சிகளால் வீணாகும் நிலை உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால், இன்னும் ஓரிரு மாதங்களில் 82 டன் அரிசியும் உணவுக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு வீணாகிவிடும் என கூறப்படுகிறது.

மத்திய அரசு சாா்பில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு மாதம்தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டுவருகிறது. அதோடு கூடுதலாக புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக வழங்கப்பட்ட அரிசியையும் வழங்கினால், வீணாகாமல் அது மக்கள் பயன்பாட்டுக்கு சென்றுவிடும்.

எனவே, அரிசி வீணாகும் முன்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT