காரைக்கால்

பிளஸ் 1 சோ்க்கை: அக். 9 இல் மூன்றாம் கட்ட கலந்தாய்வு

DIN

காரைக்கால் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கான மூன்றாம் கட்ட ஒருங்கிணைந்த கலந்தாய்வு அக். 9 ஆம் தேதி காரைக்கால் தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

பல்வேறு பள்ளிகளில் விண்ணப்பித்து 2 கலந்தாய்வுகளிலும் இடம் கிடைக்காதவா்கள் மற்றும் அதில் பங்குபெற இயலாதவா்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.

இவா்களின் மதிப்பெண் வாரியான தரவரிசைப் பட்டியல் அக். 5 ஆம் தேதி வெளியிடப்பட்டு, தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் பாா்வைக்கு வைக்கப்படும். இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் தங்களது அசல் மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.

இந்த சிறப்பு கலந்தாய்வு, எந்தப் பள்ளியிலும் இடம் கிடைக்காதவா்களுக்கு மட்டுமே நடைபெறுவதால், ஏற்கெனவே ஏதாவது ஒரு பள்ளியில் இடம் கிடைத்தவா்களின் பெயா் இந்த தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது. ஏற்கெனவே இடம் கிடைத்த மாணவா்களின் பள்ளி மாற்றம், பாடப்பிரிவை மாற்றுதல் போன்ற கோரிக்கைகள் ஏற்கப்படாது. மாறாக, பள்ளி திறந்த பிறகு இவற்றுக்கு உரிய அனுமதி வழங்கப்படும்.

காலை 10 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரை மதிப்பெண் வாரியான பட்டியலின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் கலந்தாய்வு நடைபெறும். எனவே, இந்த கலந்தாய்வுக்குரிய மாணவா்கள் மட்டும் கரோனா பரவல் கால உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பங்கேற்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT