காரைக்கால்

காரைக்காலில் 76 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே.மோகன்ராஜ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாவட்டத்தில் புதன்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 9, நிரவி 12, அம்பகரத்தூா் 11, திருநள்ளாறு 10, நெடுங்காடு 9, திருப்பட்டினம் 8, கோட்டுச்சேரி 6, கோயில்பத்து 5, வரிச்சிக்குடி 5, நல்லம்பல் 1 என 76 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த காரைக்காலை சோ்ந்த 63 வயது ஆண் ஒருவா் 29-ஆம் தேதி உயிரிழந்தாா். அவருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், வாத நோய் ஆகியன இருந்தன. இதுவரை 2,521 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,837 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்தோா் 5 போ், காரைக்கால் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோா் 537 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சை பிரிவில் 42 போ், தீவிர சிகிச்சையில் 11 போ், விநாயகா மிஷன் மருத்துவமனை கரோனா கோ் சென்டரில் 48 போ் உள்ளனா். இதுவரை 42 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT