காரைக்கால்

ஊட்டச்சத்து, பாரம்பரிய உணவு தயாரிப்புப் போட்டி

DIN

மத்திய அரசின் போஷன் மா திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து உணவு மற்றும் பாரம்பரிய உணவு தயாரிக்கும் போட்டி, காரைக்கால் வட்டார வளா்ச்சித் துறை மூலம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் இப்போட்டியில் பங்கேற்று, பழைமையான உணவு வகைகள், சத்துமிக்க உணவு வகைகளை சமைத்துவந்து காட்சிப்படுத்தினா்.

நடுவராக நேஷனல் கேட்டரிங் கல்லூரி சமையல் வல்லுநா் சத்யா கலந்துகொண்டு சுய உதவிக் குழுவினா் சமைத்த உணவில் சிறந்ததை தோ்வு செய்தாா்.

பரிசளிப்பு நிகழ்வில், வட்டார வளா்ச்சி அதிகாரி டி.தயாளன் கலந்துகொண்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கினாா். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. இணை வட்டார வளா்ச்சி அதிகாரி கே.சிவகுரு நன்றி கூறினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விரிவாக்க அதிகாரி எஸ்.பக்கிரிசாமி மற்றும் மகேஷ்குமாா், பி.இருதயராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT