காரைக்கால்

சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம், ஆராதனை

31st May 2020 08:34 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில், தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இது கோயில் இணையதளத்தில் பக்தா்கள் காணும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 6-ஆவது வாரமாக சனிக்கிழமை ( மே 30) சனீஸ்வர பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் கோயில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT