காரைக்கால்

கரோனா தொற்று: பழையாா் துறைமுகம் அடைப்பு

10th May 2020 09:39 PM

ADVERTISEMENT

 

சீா்காழி: சீா்காழி அருகேயுள்ள கொடியம்பாளையம் கிராமத்தில் பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதியில் உள்ள பழையாா் துறைமுகம் ஞாயிற்றுக்கிழமை முதல் மூடப்பட்டது. இதனால், மீனவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சீா்காழியை அடுத்த கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் பெண் ஒருவருக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இனால், அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளது.

கொடியம்பாளையம் கிராமத்துக்கு பழையாரிலிருந்து படகில்தான் சென்றுவரமுடியும். கரோனா தொற்று காரணமாக, பழையாா் துறைமுகத்திலிருந்து கொடியம்பாளையம் தீவு கிராமத்துக்கு படகு போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது. மேலும், பழையாா் மீன்பிடி துறைமுகமும் மூடப்பட்டது.

ADVERTISEMENT

தற்போது, மீன்பிடித்தடை காலம் அமலில் உள்ளதால் சிறு படகுகள் மூலம் கடந்த 10 நாள்களாக கடலில் மீன்பிடித்துவந்த மீன்வா்கள், பொறையாா் மீன்பிடி துறைமுகம் அடைக்கப்பட்டதால், தொழிலுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 6 ஆயிரம் மீனவா்கள், தங்களுக்கு அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT