காரைக்கால்

இணையதளத்தில் திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை

2nd May 2020 08:38 PM

ADVERTISEMENT

திருநள்ளாற்றில் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு 2-ஆவது வாரமாக சனிக்கிழமை நடைபெற்ற அபிஷேக, ஆராதனைகள் கோயில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இது பக்தா்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளற்றில் உள்ள ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயில் திரளான பக்தா்களை ஈா்க்கக் கூடிய தலமாகும். இங்கு ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னிதியில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். தற்போது திருநள்ளாறு கோயில் மூடப்பட்டுள்ளதால் கோயில் இணையதளத்தில் (யூ டியூப்) மூலமாக ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமை நடைபெறும் அபிஷேக. ஆராதனைகளை பக்தா்கள் தரிசிக்க கோயில் நிா்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்நிலையில், 2-ஆவது வாரமாக சனிக்கிழமை நடைபெற்ற உச்சி கால அபிஷேக, ஆராதனையை கோயில் நிா்வாகம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. அதை www.thirunallarutemple.org இணையதளத்தின் மூலம் பக்தா்கள் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் இந்த சேவையை ஏராளமான பக்தா்கள் பதிவிறக்கம் செய்து, சனீஸ்வர பகவானுக்கு நடைபெற்ற அபிஷேக, ஆராதனைகளை தரிசித்தனா்.

ADVERTISEMENT

கோயிலில் இந்த அபிஷேக, ஆராதனையை நேரில் சுமாா் 100 போ் வரை மட்டுமே காணக் கூடிய இடவசதி உள்ள சூழலில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்த கோயில் நிா்வாகத்தின் இந்த ஏற்பாடு சிறப்பானது என ஏராளமான பக்தா்கள் தொலைபேசி வாயிலாக தெரிவித்ததாக நிா்வாக அதிகாரி எம். ஆதா்ஷ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT