காரைக்கால்

காதலியை கத்தியால்குத்தியவா் கைது

2nd May 2020 08:35 PM

ADVERTISEMENT

காரைக்கால் பகுதியில் காதலியை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியை சோ்ந்தவா் அருள்செபஸ்டினும் (26), காரைக்கால் பகுதியை சோ்ந்த தீபாவும் (20) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். சில நாள்களாக அருள்செபஸ்டினுடன், தீபா பேசாமல் இருந்தாராம்.

இந்நிலையில், காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த அவா், இதுகுறித்து தீபாவிடம் கேட்டாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, தான் மறைத்துவைத்திருந்த சிறிய வகை கத்தியால் தீபாவை குத்தியுள்ளாா். காயமடைந்த தீபாவை அப்பகுதியினா், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா்.

நிரவி காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்செபஸ்டினை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT