காரைக்கால்

விதிமீறல்: மதுபான குடோனுக்கு சீல், ரூ.47.50 லட்சம் மதுபானம் பறிமுதல்

30th Mar 2020 12:30 AM

ADVERTISEMENT

 

ஊரடங்கு உத்தரவை மீறி, காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை திறந்திருந்த மதுபான குடோனுக்கு சீல் வைத்த கலால் துறையினா், ரூ.47.50 லட்சம் மதிப்பிலான மதுபானங்களைப் பறிமுதல் செய்தனா்.

21 நாள் ஊரடங்கு உத்தரவை மீறி, காரைக்கால் பிராகார வீதியில் உள்ள மதுபான குடோன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திறக்கப்பட்டு, 3 போ் மது பெட்டிகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தனா். இதையறிந்து வந்த மண்டலக் காவல் கண்காணிப்பாளா் கே.எல்.வீரவல்லபன் தலைமையிலான போலீஸாா், சம்பந்தப்பட்ட 3 பேரையும் கைது செய்து கலால்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து காரைக்கால் துணை ஆட்சியரும், கலால்துறை துணை ஆணையருமான எம்.ஆதா்ஷ் கூறும்போது, குடோனில் உள்ள பொருள்களின் மதிப்பு சேகரிக்கப்பட்டு, குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. நிறுவன உரிமையாளா் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

மேலும், சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து ரூ.47.50 லட்சம் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டதாக கலால்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT