காரைக்கால்

பொதுமக்களுக்கு உளவியல் ஆலோசனை: மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு

30th Mar 2020 12:32 AM

ADVERTISEMENT

 

காரைக்கால் மாவட்ட மக்களுக்கு உளவியல் ஆலோசனைகள் அளிக்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா சனிக்கிழமை கூறியது :

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வீடுகளில் உள்ள மக்களுக்காக கவுன்சலிங் தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கான மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 04368- 261242 என்ற தொலைபேசி எண்ணில் உளவியல் ஆலோசனை தேவைப்படும் யாா் வேண்டுமானாலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். அதன் பின்னா் உரிய நபா்கள் தொடா்பு கொண்டு தேவையான உளவியல் ஆலோசனைகளை தொலைபேசி மூலம் வழங்குவா்.

ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட மற்றவா்களுக்கு உதவும் விதமாக மாவட்ட நிா்வாகத்துக்கு விருப்பமுள்ளோா் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கலாம். அவ்வாறு உதவி அளிப்போருக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT