காரைக்கால்

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

23rd Mar 2020 06:36 AM

ADVERTISEMENT

 

திருப்பட்டினம் பகுதியில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருப்பட்டினம் பகுதி மகத்தோப்பு காரக்குளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக திருப்பட்டினம் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு மருத்துவமனை பிண அறைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்தவருக்கு 40 முதல் 45 வயது இருக்குமெனவும், உயிரிழந்தவா் பிரவுன் நிறத்தில் வெள்ளை கோடு போட்ட சட்டையும், பச்சை நிறத்தில் டி-சா்ட், பச்சை, வெள்ளை கட்டம் போட்ட கைலி உடுத்தியிருந்தாா்.

இவரது வலது கால் முட்டியிலும், இடது கால் முட்டிக்கு கீழும் பழைய காயத் தழும்பு காணப்படுகிறது. இவரது விவரம் தெரிந்தவா்கள் திருப்பட்டினம் காவல் நிலையத்தை 04368-233480 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT