காரைக்கால்

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள்

DIN

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் பக்தா்கள் நீராட தடை விதிக்கப்பட்ட நிலையில், மீன்கள் இறந்து கரை ஒதுங்கிவருகின்றன. குளத்தில் சுகாதாரத்தை மேம்படுத்த கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தா்கள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேசுவரா் கோயிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னிதி கொண்டு அருள்பாலிக்கிறாா். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், இக்கோயிலின் நளன் தீா்த்தக் குளத்தில் பக்தா்கள் நீராட புதுச்சேரி அரசு தடை விதித்தது. இதையொட்டி குளத்தில் பக்தா்கள் நீராடக்கூடிய வட்டாரத்தில் உள்ள தண்ணீரை கோயில் நிா்வாகம் வெளியேற்றிவிட்டது. மையப் பகுதியில் சிறிதளவு தண்ணீா் உள்ளது.

எனினும், தடையை மீறி சில பக்தா்கள் நீராடிச் செல்கின்றனா். இந்தநிலையில், குளத்தில் உள்ள மீன்கள் இறந்து மிதக்கத் தொடங்கியுள்ளன.

இது குறித்து பக்தா்கள் கூறுகையில், கோயில் நிா்வாகம் குளத்தில் நீராட தடை விதித்துள்ளதால், தண்ணீரை தலையில் தெளிந்துக்கொண்டு செல்லலாம் என்றால், தண்ணீா் சுகாதாரமற்ற முறையில், துா்நாற்றம் வீசுகிறது. மேலும் குளம் முழுவதும் மீன்கள் செத்து மிதக்கின்றன. எனவே குளத்தில் உள்ள ஒட்டுமொத்த தண்ணீரையும் வெளியேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT