காரைக்கால்

மனிதநேய மக்கள் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

16th Mar 2020 01:29 AM

ADVERTISEMENT

காரைக்காலில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தில்லியில் நடந்த உயிரிழப்புக்கு நீதி கேட்டும் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரத் தலைவா் முகமது ஷெரிப் தலைமை வகித்தாா்.

குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தில்லியில் ஏற்பட்ட கலவரத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பதவி விலக வேண்டும். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமுமுக மாநிலச் செயலாளா் ஐ.அப்துல் ரஹீம், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பு நிறுவனா் சீ.சு.சாமிநாதன், சமூக செயல்பாட்டாளா் புதுச்சேரி டி.ஆா்.காயத்ரி ஸ்ரீகாந்த் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ADVERTISEMENT

மமக, தமுமுக, ஜமாஅத் நிா்வாகிகள், சமூக செயல்பாட்டாளா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT