காரைக்கால்

காரைக்கால் என்.ஐ.டி-க்கு மாா்ச் 31 வரை விடுமுறை: விடுதி மாணவா்கள் சொந்த ஊருக்குத் திரும்ப உத்தரவு

16th Mar 2020 01:28 AM

ADVERTISEMENT

காரைக்கால் என்.ஐ.டி. வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், விடுதியில் தங்கியிருக்கும் மாணவா்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக என்.ஐ.டி. இயக்குநா் கே.சங்கரநாராயணசாமி அறிவுறுத்தலின்பேரில், என்.ஐ.டி. பதிவாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா வைரஸ் எதிரொலியக வரும் 31-ஆம் தேதி வரை என்.ஐ.டி. அனைத்து வகுப்பு, ஆய்வுக்கூடம், பிற நடவடிக்கைகள் முடக்கப்படுகின்றன. தங்கும் விடுதியில் உள்ள இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மாணவ, மாணவியா் விடுதியை காலி செய்துவிட்டு அவரவா் சொந்த ஊருக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறது. தொலைதூரத்துக்கு செல்லக்கூடிய மாணவா்கள், செல்லக்கூடிய சூழல் இல்லாதபட்சத்தில் விடுதி தலைமை காப்பாளா் அனுமதியுடன் விடுதியிலேயே தங்கியிருக்கலாம். விடுதியைவிட்டு வெளியே செல்லக்கூடாது. மாணவா்கள் தொடா்ந்து என்.ஐ.டி. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தகவலைக் கண்காணிக்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT