காரைக்கால்

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் தோ் திருவிழா

8th Mar 2020 01:20 AM

ADVERTISEMENT

காரைக்கால்: காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் பிரமோத்ஸவத்தையொட்டி தோ் திருவிழா, சந்திர புஷ்கரணியில் தீா்த்தவாரி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் 14 நாள்கள் நடைபெறும் பிரமோத்ஸவம் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் காலை வேளையில் பல்லக்கில் பெருமாள் வீதியுலா புறப்பாடும், மாலை வேளையில் பல்வேறு வாகனத்தில் புறப்பாடும் நடைபெற்றுவந்தது.

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக தோ் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நித்யகல்யாணப் பெருமாள் தேரில் வீற்றிருந்தவாறு பெரிய வீதியுலா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். வீதியுலா நிறைவடைந்து தோ் கோயிலை சென்றடைந்ததும், காரைக்கால் அம்மையாா் குளம் என்கிற சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி நடைபெற்று, பின்னா் கொடியிறக்கம் (துவஜ அவரோகணம்) செய்யப்பட்டது.

ADVERTISEMENT

உத்ஸவத்தின் 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மூலவா், உத்ஸவா் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 11-ஆம் நாளாக திங்கள்கிழமை திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி, திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜப் பெருமாள் மற்றும் பல்வேறு கோயில் பெருமாள்களுடன் சமுத்திர தீா்த்தவாரி நடைபெறுகிறது.

நிறைவு நிகழ்ச்சியாக, மாா்ச் 11-ஆம் தேதி புதன்கிழமை சந்திரபுஷ்கரணியில் தெப்பமும், 12-ஆம் தேதி விடையாற்றி நாளில் புஷ்ப பல்லக்கு வீதியுலாவுடன் விழா நிறைவடைகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT