காரைக்கால்

தா்பாரண்யேசுவரா் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு

8th Mar 2020 01:22 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலில் சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு நந்தியையும், சிவபெருமானையும் வழிபாடு செய்தனா்.

திருநள்ளாறு பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேசுவரா் கோயிலில் உள்ள நந்திக்கு நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்வது வழக்கம்.

மாதம் இரு முறையாக வளா்பிறை, தேய்பிறை காலத்தின்போது பிரதோஷ நாள் வருகிறது. மாசி மாதத்தின் பிரதோஷம் சனிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

திருநள்ளாறு கோயில் கொடி மரம் அருகே உள்ள பெரிய நந்திக்கு, சூரிய அஸ்தமனமாகும் சமயத்தில் சிவாச்சாரியாா்கள் எண்ணெய், தயிா், பால், சந்தனம், மஞ்சள், தேன், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்தனா்.

தொடா்ந்து நந்திக்கு பல்வேறு மலா்கள் மற்றும் வஸ்திரம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதே நேரத்தில் மூலவா் தா்பாரண்யேசுவரருக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் அருகம்புல் மாலை அணிவித்து நந்தியை வழிபாடு செய்தனா். சனி பிரதோஷ நாள் மிகுந்த விசேஷமிக்கது என்கிற நம்பிக்கை பக்தா்களிடையே உள்ளதாலும், வழக்கமாக திருநள்ளாறு கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனத்துக்கு வருகை தரும் நிலையில், பிரதோஷ வழிபாட்டில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பக்தா்கள் திரண்டு காணப்பட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT