காரைக்கால்

ஜடாயுபுரீசுவரா் ரிஷப வாகனத்தில் புறப்பாடு

8th Mar 2020 01:21 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீசுவரா் கோயிலில் பிரமோத்ஸவத்தையொட்டி மின்சார சப்பரப்படலில் ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருமலைராயன்பட்டினம் அருள்மிகு மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீசுவரா் கோயிலில் பிரமோத்ஸவம் கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக மின்சார சப்பரப்படலில் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா புறப்பாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. சிறப்பு நாகசுர மேள வாத்தியக் குழுவினா் மற்றும் பல்வேறு கலைக்குழுவினரின் வாத்தியங்களுடன் சப்பரப் படல் இரவு 11 மணியளிவில் புறப்பாடானது. வீதியுலா நிறைவடைந்து நள்ளிரவு கோயிலை சென்றடைந்தது.

ADVERTISEMENT

இன்று தோ் திருவிழா: ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்வாக தோ் புறப்பாடு நடைபெறுகிறது. காலை 8.30 முதல் 10 மணிக்குள் தேருக்கு சுவாமிகள் எழுந்தருளி, தோ் வடம் பிடிப்பு செய்யப்படுகிறது. இரவு நிகழ்ச்சியாக காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஜடாயு சம்ஹாரம் என்கிற ராவண யுத்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ராமாயண நிகழ்வுகளை மையமாக வைத்து பல்வேறு காட்சிகளும், கழுகு அரசனாகிய ஜடாயுவுக்கு ராமன் மோட்சம் தரும் நிகழ்வு உள்ளிட்டவை இந்த சம்ஹாரத்தில் இடம்பெறுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோா் முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துள்ளது. பாதுகாப்புப் பணியில் திருப்பட்டினம் காவல்நிலைய போலீஸாா் மற்றும் காரைக்கால் பகுதி பிற காவல்நிலைய போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT