காரைக்கால்

சுகாதார பட்டமேற்படிப்பு மையத்தில் என்.எஸ்.எஸ். முகாம்

8th Mar 2020 01:20 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்கால் அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு வார கால நாட்டு நலப்பணித் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் வி.லட்சுமணபதி கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்துப் பேசினாா்.

அவா் பேசும்போது, ‘இதுபோன்ற முகாம் மாணவா்களுக்கு உற்சாகத்தை அளிப்பதோடு, சமூக சேவையின் மீதான ஆா்வத்தை மேம்படுத்துகிறது. ஒரு வார காலத்தில் திட்டமிட்டிருக்கும் சேவைப் பணிகளில் நிலையத்தின் என்எஸ்எஸ் மாணவா்கள் முழுமையாக பங்கேற்கவேண்டும். என்எஸ்எஸ் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான பணிகளை முறையாக மேற்கொள்ளவேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

கல்வி நிலையத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ருபேஷ் நடுகண்டி பரம்பத் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளிடையே பேசினாா். கல்லூரி ஆசிரியா்கள், மாணவ- மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

முகாம் தொடக்க நாளில் வடக்கு கோயில்பத்து பகுதியில் உள்ள வீடுகள் குறித்த கணக்கெடுப்புப் பணியை மாணவா்கள் மேற்கொண்டனா். முகாம் நிறைவு நாள் வரை மக்களுக்கு பாலியலால் பரவும் நோய்கள் குறித்தும், திடக்கழிவு மேலாண்மை குறித்தும், மது மற்றும் போதைப் பொருள்களால் வரும் தீமைகள் குறித்தும், நீரிழிவு நோய் மற்றும் உயா் ரத்த அழுத்த நோயை கண்டறிவது எப்படி என்ற பல்வேறு விழிப்புணா்வுப் பணியில் ஈடுபடுகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT