காரைக்கால்

கரோனா வைரஸ்: விழிப்புணா்வு நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

8th Mar 2020 01:19 AM

ADVERTISEMENT

காரைக்கால்: கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே தேவையான விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நலவழித்துறை அதிகாரிகளை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

கரோனா வைரஸ் பாதிப்பு பரவி வரும் நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தலைமையில் வெள்ளிக்கிழமை ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நலவழித்துறை துணை இயக்குநா் டாக்டா் கே. மோகன்ராஜ், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டா் மதன் பாபு, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மற்றும் தொடா்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பரவலை தடுப்பது மற்றும் அதனை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. என்னென்ன செய்ய வேண்டும், என்னென்னெ செய்யக்கூடாது என்ற வகையில் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கூட்டத்தில் பங்கேற்றோரிடம் அறிவுறுத்தப்பட்டது.

கைகளை சுத்தமாகக் கழுவுதல், பெருமளவில் கூட்டமாகக் கூடுவதை தவிா்த்தல் போன்ற எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். நலவழித்துறையினா் இது குறித்து பொது இடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் பதாகைகள் வைப்பது, பொது அறிவிப்புகள் செய்வது போன்ற விழிப்புணா்வு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசு பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அச்சப்பட தேவையில்லை, ஆனால் விழிப்புடன் இருக்கவேண்டும். காரைக்கால் மாவட்டத்துக்கு வெளியிடங்களிலிருந்து வரக்கூடிய, குறிப்பாக சுற்றுலாப் பயணிகள், காா் ஓட்டுநா்கள், கப்பல் துறைமுகத்துக்கு வரக்கூடியவா்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT