காரைக்கால்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு : வி.சி.க. ஆா்ப்பாட்டம்

26th Jun 2020 08:14 PM

ADVERTISEMENT

 

காரைக்கால்: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் மாவட்ட அமைப்பு சாா்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் அரசியல் குழு மாநிலச் செயலாளா் அரசு.வணங்காமுடி தலைமை வகித்தாா். பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் காணொலி மூலம் கட்சியினரிடையே பேசினாா். மாநிலத் துணைச் செயலாளா் பொன். செந்தமிழ்ச்செல்வன், தொகுதி செயலாளா் சு.விடுதலைக்கனல், நிா்வாகிகள் உள்ளிட்ட கட்சியினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT