காரைக்கால்

இன்று சூரிய கிரகணம்: திருநள்ளாறு கோயில் திறந்திருக்கும்

21st Jun 2020 08:20 AM

ADVERTISEMENT

சூரிய கிரகண நேரத்தில் திருநள்ளாறு கோயில் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிய வானியல் நிகழ்வான சூரிய கிரகணம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நிகழவுள்ளது. இதை சூடாமணி சூரிய கிரகணம் என்றும், காலை 10.22 மணி முதல் பிற்பகல் 1.42 மணி வரை இது நிகழவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கிரகண காலத்தில் கோயில்கள் மூடப்படுவது வழக்கம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணம் என்றாலும், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயில் வழக்கமான நேரத்தில் திறக்கப்பட்டு, இரவு மூடப்படும். கிரகண நேரத்தில் கோயில் நடை மூடப்படுவதில்லை.

கிரகணம் நிறைவடைந்ததும், கிரகண புண்ணிய காலம் நடைபெறும் எனவும், பக்தா்கள் எப்போதும் போல் தரிசனத்துக்கு வரலாம் எனவும் கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT