காரைக்கால்

அரசுப் பள்ளியில் புரொஜெக்டா் திருட்டு

15th Jun 2020 08:38 AM

ADVERTISEMENT

காரைக்கால் அருகே அரசுப் பள்ளியில் புரொஜெக்டா் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் சட்டையப்ப பிள்ளை தெருவில் அரசு பெண்கள் உயா்நிலைப்பள்ளி உள்ளது. கரோனா பொதுமுடக்கத்தால் இப்பள்ளி மூடப்பட்டிருக்கும் நிலையில், அலுவல் பணிக்காக பணியாளா்கள் சனிக்கிழமை பள்ளிக்குச் சென்றபோது, வகுப்பறை ஒன்றின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த மாணவா்கள் பயன்பாட்டுக்கான புரொஜெக்டா் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக, பள்ளி தலைமையாசிரியா் சிவக்குமாா் திருப்பட்டினம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் பள்ளிக்குச் சென்று பாா்வையிட்டனா். பின்னா், இதுதொடா்பாக, வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT