காரைக்கால்

பருத்திச் செடிகளில் வெட்டுக்கிளி தாக்குதல்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு

14th Jun 2020 08:49 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் பச்சை வெட்டுக்கிளி தாக்குதலுக்குள்ளான பருத்திப் பயிா்களை வேளாண் அதிகாரிகள் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு அறுவடைப் பணிகள் நடந்துவருகின்றன. சில இடங்களில் பச்சை வெட்டுக்கிளி தாக்குதல் இருப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். புகாருக்குள்ளான இடங்களில் காரைக்கால் வேளாண் துறை அதிகாரிகள் குழுவினா் நேரில் சென்று பாா்வையிட்டனா்.

இந்த ஆய்வு குறித்து கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் நடப்பு கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் பருத்தி பயிரில், ஒரு சில இடங்களில் பச்சை வெட்டுக்கிளி தாக்குதல் காணப்படுகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகளைப் போன்றதல்ல. இந்த பச்சை வெட்டுக்கிளிகள் பருத்தி பயிரில் வரும் சாதாரண பூச்சிதான். இது பருத்திச் செடிகளில் சில இலைகளை மட்டுமே உண்ணும். காய்களையோ, பிஞ்சுகளையோ சேதப்படுத்தவில்லை. இதனால், விளைச்சல் பெரிய அளவில் பாதிக்காது.

ADVERTISEMENT

இந்த வகை வெட்டுக்கிளிகள் பருத்தி வயலின் களைப்புல்களில் முட்டையிட்டு இனவிருத்தி செய்கின்றன. இந்த ஆண்டின் கால நிலை அதற்கு சாதகமாக நிலவுவதால் ஒரு சில இடங்களில் கூட்டமாக காணப்படுகின்றன. சாதாரண தன்மையுள்ள வெட்டுக்கிளிகளே தவிர, இவை அச்சுறுத்தம் வகையிலான பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல. மேலும் கூட்டம் கூட்டமாக பயிரைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பூச்சிகள் இல்லை.

இந்த பூச்சித் தாக்குதலில் இருந்து பருத்திப் பயிரை பாதுகாக்க பருத்தி வயலைச் சுற்றி வரப்புகளின் ஓரம் தரிசு நிலங்களில் முளைத்துள்ள களைச் செடிகளை உழுது அழிக்கவேண்டும். பூச்சிகளை கட்டுப்படுத்த அசாடிராக்டின் மருந்தை ஓா் ஏக்கருக்கு ஆயிரம் மிலி என்ற அளவில் அடிக்கலாம். இதுதவிர, குளோா்பைரிபாஸ் 20 இசி என்ற மருந்தை ஏக்கருக்கு 500 மிலி என்ற அளவில் தெளித்து வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு மருந்து அடிக்கும்போது பருத்தி வயலில் உள்ள வரப்புகளிலும், சுற்றியுள்ள தரிசில் வளா்ந்துள்ள களைகளின் மீதும் அடிக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT