காரைக்கால்

பத்தக்குடி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் பாலாலய பூஜை

14th Jun 2020 08:49 AM

ADVERTISEMENT

திருநள்ளாறு அருகே நூற்றாண்டுகள் பழைமையான ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலை புதிதாக கட்டுவதற்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு அருகே உள்ள பத்தக்குடி கிராமத்தில் புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தில் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் வகையறாவான ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது.

இக்கோயில் மன்னா்கள் காலத்தில் கட்டப்பட்டது என்றும், குடமுழுக்கு விழாவை யாரும் கண்டிருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. லட்சுமி நாராயணப் பெருமாள் விக்ரகம் மற்றும் ஆழ்வாா் ஒருவரின் விக்ரகம் உள்ளிட்ட சில கற்சிலைகள் மட்டுமே இக்கோயிலில் உள்ளன.

இக்கோயிலை புதுச்சேரி அரசு உதவியுடன் புதுப்பித்துக் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள், கோயில் நிா்வாகத்தினா் முடிவு செய்தனா். அதன்படி, இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியுடன் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள பாலாலய பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்நிகழ்வில் வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், கைலாசநாதா் கோயில் அறங்காவல் தலைவா் எம். செல்வராஜ், துணைத் தலைவா் எஸ். கணேசன், செயலா் பக்கிரியாப்பிள்ளை, பொருளாளா் காளியப்பன், உறுப்பினா் எஸ். அன்பரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து, இக்கோயில் அறங்காவல் நிா்வாகத்தினா் கூறியது:

நூற்றாண்டுகள் பழைமையான இக்கோயில் முழுவதும் சிதிலமடைந்துவிட்டது. புதிதாக கோயில் கட்ட முடிவெடுத்து, அரசின் அனுமதியுடன் பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலை ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நன்கொடை மற்றும் அரசின் உதவியின் மூலம் கட்டுமானம் மேற்கொள்ளப்படும். கோயிலில் ஒரு ஆழ்வாா் சிலை உள்ளது. ஆழ்வாா் யாா் என்பது தெரியவில்லை. இதனை அறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அது தெரியவந்தால், கோயில் எந்த நூற்றாண்டை சோ்ந்தது என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT