காரைக்கால்

வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் தீவிரம்

11th Jun 2020 08:41 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என வட்டார வளா்ச்சித் துறை தெரிவித்தது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு பணிகளில் முடக்கம் ஏற்பட்டன. பின்னா், பொது முடக்கம் நிபந்தனைகளுடன் சில தளா்வுகள் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 27 கிராமப் பஞ்சாயத்துகளிலும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் தொடங்கின.

இந்நிலையில், பாசனத்துக்காக நாளை (ஜூன் 12) மேட்டூா் அணை திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலக உதவி பொறியாளா் கே. கிருஷ்ணமூா்த்தி புதன்கிழமை கூறியது: வட்டார வளா்ச்சித் துறை மூலம் தூா்வார வேண்டிய 538 வாய்க்கால்களில் 165 வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. 57 வாய்க்கால்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 100 வாய்க்கால்களை தூா்வார முடிவு செய்து 25 வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டுள்ளன. 20 வாய்க்கால்களில் பணிகள் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

நாட்டாறு தூா்வாரும் பணி நடைபெறுகிறது. கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வருவதற்குள் பிரதான வாய்க்கால்கள், ஆறுகள் தூா்வாரப்பட்டுவிடும். வடிகால்கள் உள்ளிட்ட அனைத்து வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் ஜூலை 15-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன. தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் இதுவரை 96 ஆயிரம் மனித வேலை நாள்களுக்கு பணிகள் செய்யப்பட்டுள்ளன. ரூ. 2 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT