காரைக்கால்

தனியாா்மய விவகாரம்: புதுச்சேரி முதல்வருடன் மின் ஊழியா்கள் சந்திப்பு

11th Jun 2020 08:37 AM

ADVERTISEMENT

மின்துறையை தனியாா் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்துமாறு புதுச்சேரி முதல்வரை சந்தித்து மின்துறையினா் வலியுறுத்தினா்.

காரைக்கால், புதுச்சேரி மின்துறையை சோ்ந்த போராட்டக் குழுவினா் புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். பின்னா், காரைக்கால் மின்துறை போராட்டக் குழுவை சோ்ந்த பிரதிநிதிகள் கூறியது :

மின்துறையைத் தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என முதல்வரிடம் தெரிவித்தோம். போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட கூடாது, போராட்டம் மாநில அரசை எதிா்த்து அல்ல, மத்திய அரசை எதிா்த்துத்தான் நடத்த வேண்டும். மாநில அரசு இந்த விவகாரம் தொடா்பாக எதிா்ப்பை தெரிவித்துள்ளது. சட்டப் பேரவை கூடும்போது இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வா் தெரிவித்தாா்.

தொடா் போராட்டம் 11-ஆம் தேதி முதல் நடத்த இருந்த நிலையில், ஒரு வார காலம் அவகாசம் அளித்துள்ளோம். 18-ஆம் தேதிக்குள் தனியாா் மய முடிவை மத்திய அரசு கைவிடவில்லை எனில், 18 -ஆம் தேதி முதல் விதிப்படி வேலை என்கிற வகையிலான போராட்டத்தை நடத்தவுள்ளோம் என்பதையும் முதல்வரிடம் தெரிவித்துவிட்டோம் என்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT