காரைக்கால்

விவசாயத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

4th Jun 2020 07:44 PM

ADVERTISEMENT

விவசாயத் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வலியுறுத்தி, காரைக்காலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க காரைக்கால் அமைப்பு சாா்பில் கூட்டுறவு பால் ஒன்றிய அலுவலகம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவா் என்.எம். கலியபெருமாள் தலைமைவகித்தாா்.

விவசாயக் கூலித் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்கவேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கி, தினக்கூலியை ரூ.600-ஆக உயா்த்தவேண்டும். பொது விநியோகத் திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு 50 கிலோ இலவச அரிசி வழங்கவேண்டும். குடிசை வீடுகளுக்கும், விவசாயிகளுக்கும், நெசவாளா்களுக்கும் இலவச மின்சாரத்தை தொடா்ந்து வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்றவா்கள் சமூக இடைவெளியுடன் நின்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அ.வின்சென்ட், மாவட்டச் செயலா் எஸ்.எம். தமீம், நகரச் செயலா் எஸ்.ஏ.முகம்மது யூசுப், விவசாய சங்க செயலா் ஆா். ராமகிருஷ்ணன் மற்றும் கே. பிரேம்குமாா், பாக்கியராஜ், பி. ஜெயராமன், எஸ்.முத்துக்குமாரசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT