காரைக்கால்

சிமென்ட் சாலை அமைக்கும் பணி: அமைச்சா் ஆய்வு

31st Jul 2020 08:29 AM

ADVERTISEMENT

 திருநள்ளாறு பகுதி கிராமப்புறங்களில் சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணியை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநள்ளாறு பகுதியில் அம்ரூத் திட்டத்தின்கீழ் சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலகம் சாா்பில், திருநள்ளாறில் 6 கிராமங்களில் நகரத்தோடு இணைக்கும் வகையில் சிமென்ட் சாலைப் பணிகள் தலா ரூ.7 லட்சம் செலவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்றுவருகின்றன.

இந்த பணிகளை, வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், சந்தனமாதா கோயில் தெரு மற்றும் பிடாரி கோயில் தெரு பகுதியில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா். பருவமழை அடுத்த சில மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில், சாலைப் பணிகளை விரைவில் நிறைவேற்றும்படி அமைச்சா் அறிவுறுத்தினாா்.

அப்போது, அப்பகுதியினா் மின் விளக்குகள் இல்லை என தெரிவித்ததைத் தொடா்ந்து, உடனடியாக மின்துறையினரை தொடா்புகொண்டு மின்விளக்குகள் அமைக்க அமைச்சா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அதிகாரி தயாளன், இணை அதிகாரி சிவகுரு, உதவிப் பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, இளநிலைப் பொறியாளா் முருகபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT