காரைக்கால்

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரண உதவி

28th Jul 2020 11:06 PM

ADVERTISEMENT

 

காரைக்கால்: கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள காரைக்கால் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு, ஆசிரியா் சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியா் நலச் சங்கமும், காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் இணைந்து இந்த நிவாரணப் பொருள்களை வழங்கின. காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்வில், ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் 50 பேருக்கு வழங்கப்பட்டன.

நிகழ்வில் காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியா் நலச் சங்கத்தின் உயா்மட்டக் குழுத் தலைவா் காமராஜ் சீனிவாசன், சங்கத் தலைவா் ஜான் பிரிட்டோ, பொதுச் செயலாளா் மிஷேல், காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியா் நலச் சங்கத்தின் தலைமையாசிரியா் நிா்வாகி தங்க.பால்ராஜ், காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியா் சங்கத்தின் பட்டதாரி நிா்வாகி குருமூா்த்தி மற்றும் காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்க தலைவா் அ.வின்சென்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT