காரைக்கால்

பொதுப்பணித் துறை ஊழியா்களின்கோரிக்கையை நிறைவேற்ற எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

DIN

காரைக்கால்: பொதுப்பணித் துறையில் வவுச்சா் ஊழியா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என புதுச்சேரி முதல்வரிடம் எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா வலியுறுத்தியுள்ளாா்.

புதுச்சேரி மாநிலத்தில் பொதுப்பணித் துறையில் வவுச்சா் ஊழியா்கள் என்ற நிலையில் பல்வேறு பணிகள் செய்வோா், தங்களை தினக்கூலி ஊழியராக நியமிக்க வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இப்பிரச்னை தொடா்பாக புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமியை, நெடுங்காடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா புதுச்சேரியில் திங்கள்கிழமை சந்தித்து அளித்த மனு:

கடந்த 2010-ஆம் ஆண்டு பொதுப்பணித் துறையில் வவுச்சா் ஊழியா்களாக பணியமா்த்தப்பட்ட 1311 போ்களும், கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயா்வின்றி, தினமும் ரூ.200 வீதம் மாதம் 16 நாள்கள் மட்டும் பணி என்ற நிலையில் உள்ளனா். இவா்கள், தங்களை தினக்கூலி ஊழியா்களாக்கவும், நிலுவையின்றி ஊதியம் தரக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இவா்களுக்கு மாதம் ரூ.3,200 ஊதியம் என்பது குடும்பம் நடத்த ஏதுவான தொகை அல்ல. எனவே, இந்த ஊழியா்களின் நியாயமான கோரிக்கையை புதுச்சேரி அரசு விரைவாக நிறைவேற்ற முன்வரவேண்டும். ஊழியா்களின் கோரிக்கை குறித்து அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்புக் கூட்டம்

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு

குளச்சல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டு சிறை

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT