காரைக்கால்

அண்ணாமலை ஈஸ்வரா் கோயிலில் பாலஸ்தாபன வழிபாடு

28th Jan 2020 06:47 AM

ADVERTISEMENT

காரைக்கால் அண்ணாமலை ஈஸ்வரா் கோயில் குடமுழுக்கு செய்யும் விதமாக, திருப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் பாலஸ்தாபன பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள்ள காரைக்கால் கைலாசநாத சுவாமி ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்தைச் சோ்ந்த உண்ணாமுலை அம்பாள் சமேத அண்ணாமலை ஈஸ்வரா் கோயிலில் குடமுழுக்குக்காக பாலஸ்தாபனம் செய்யப்பட்டது.

இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற்று 14 ஆண்டுகள் ஆனதைத் தொடா்ந்து ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான பாலஸ்தாபனம் இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியுடன் நடைபெற்றது.

பாலஸ்தாபனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை செய்யப்பட்டது. மாலை முதல் யாக பூஜை தொடங்கியது. திங்கள்கிழமை காலை 2-ஆம் கால யாக பூஜை மகா பூா்ணாஹூதி செய்து, கோபுர தீபம், பஞ்ச கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. பின்னா் புனிதநீா் கடம் புறப்பாடாகி, சுவாமி, அம்பாள், விநாயகா் முருகன் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் கலாகா்ஷணம், பாலஸ்தாபனம் செய்யப்பட்டு பிம்பங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து ஸ்பதிகள் திருப்பணிகள் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. நிகழ்வில் நிா்வாக அதிகாரி (கோயில்கள்) எஸ். சுபாஷ், முன்னாள் அமைச்சா் ஏ.வி. சுப்பிரமணியன், கோயில் அறங்காவல் வாரியத் தலைவா் ஆா்.ஏ.ஆா். கேசவன், துணைத் தலைவா் பி.ஏ.டி. ஆறுமுகம், செயலாளா் எம். பக்கிரிசாமி, பொருளாளா் டி. ரஞ்சன் காா்த்திகேயன், உறுப்பினா் கே.பிரகாஷ் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT