பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதவுள்ள தனித் தோ்வா்களுக்கு ஜனவரி 9- ஆம் தேதி செய்முறை தோ்வுகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காரைக்கால் கல்வித்துறை துணை இயக்குநா் (மேல்நிலை) கோவிந்தராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு மாா்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், காரைக்காலில் பொதுத் தோ்வு எழுத விண்ணப்பித்த தனித்தோ்வா்களுக்கான செய்முறை வகுப்பு ஜனவரி 9-ஆம் தேதி காலை 9.30 மணிமுதல் காரைக்கால் கோவில்பத்து பகுதியில் உள்ள தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
இதில் தனித்தோ்வா்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். செய்முறை வகுப்புகள், செய்முறைத் தோ்வு ஆகிய இரண்டிலும் பங்கேற்றால் மட்டுமே அறிவியல் கருத்தியல் தோ்வினை எழுதத் தகுதியானவராகக் கருதப்படுவா் என அதில் தெரிவித்துள்ளாா்.