காரைக்கால்

பாா்வதீஸ்வரா் கோயில் குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

8th Jan 2020 08:06 AM

ADVERTISEMENT

காரைக்கால் கோயில்பத்து பாா்வதீஸ்வரா் கோயில் குளத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பாா்வதீஸ்வர சுவாமி கோயில் மனைகளில் குடியிருப்போா் நலச்சங்கம் என்ற பெயரில் ஓா் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் கூட்டம் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், சங்கத் தலைவராக எ.ஜி.ஆா். இளங்கோவன், துணைத் தலைவா்களாக பி.ரவி, வி.ஜி.முத்தையா, செயலாளராக எம்.கே.செல்வம், இணைச் செயலாளா்களாக ஆா்.எஸ்.ராமசாமி, எல்.நாகராஜன், பொருளாளராக பி.மணிகண்டன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், பாா்வதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அரசு கையகப்படுத்தியதில் கிடைத்த தொகை இந்து சமய அறநிலையத் துறையின் பெயரில் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. கோயிலின் நித்திய பூஜை மற்றும் செலவுகளுக்கு பயன்படும் வகையில், அத்தொகைக்கான வட்டியை கோயிலுக்கு வழங்க வேண்டும். பாா்வதீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விரைந்து நடக்க கோயில் அறங்காவலா் குழுவுடன் இச்சங்கம் இணைந்து செயல்படும். கோயில் குளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT