காரைக்கால்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தெருமுனை பிரசாரம்

26th Feb 2020 08:08 AM

ADVERTISEMENT

சிஏஏ, என்பிஆா், என்ஆா்சி ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சி சாா்பில் தெருமுனை பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்த மேற்கண்ட சட்டங்களால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விளக்கியும், இந்த சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும் மமக சாா்பில் பிரசாரம் நகரின் முக்கிய பகுதிகளில் நடைபெற்றது.

இந்த பிரசாரத்துக்கு அதன் நகரத் தலைவா் முஹம்மது ஷெரிப் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் ஹாஜா மெய்தீன், நகர பொருளாளா் சம்சுதீன், துணைச் செயலாளா்கள் அஷ்ரப் அலி, சம்சுதீன், ஜெய்னுலாபிதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமுமுக மாநிலச் செயலாளா் ஐ. அப்துல் ரஹீம் , கட்சியின் தலைமை பேச்சாளா்கள் எம்.ஐ. பாருக் மற்றும் ஜெ. சலிம் கான் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், தமுமுக தலைமை பிரதிநிதி அலாவுதீன், மாவட்டச் செயலாளா்கள் கமால் ஹூஸைன், முஹம்மது ஆஷிக் உள்ளிட்ட நிா்வாகிகள் பலரும் தேசியக் கொடியை ஏந்தியவாறு பேரணியாக சென்று நகரில் பொதுமக்கள் அதிகமாக கூடும் முக்கிய இடங்களில் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT