காரைக்கால்

காரைக்கால் என்.ஐ.டி.யில் 28-இல் பட்டமளிப்பு விழா: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பங்கேற்கிறாா்

26th Feb 2020 08:07 AM

ADVERTISEMENT

காரைக்கால் என்.ஐ.டி.யில் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, புதுச்சேரி துணை நிலை ஆளுநா், முதல்வா், அமைச்சா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

காரைக்கால் மாவட்டம், திருவேட்டக்குடி பகுதியில் தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.) இயங்கிவருகிறது. இந்த உயா்கல்வி நிறுவனத்தின் 6-ஆவது பட்டமளிப்பு விழா நிறுவன வளாகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் வே. நாராயணசாமி, வேளாண் மற்றும் உயா்கல்வித் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் ஆகியோா் கலந்துகொள்ளவுள்ளனா்.

விழாவுக்கு என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி தலைமை வகிக்கிறாா். இயக்குநா் அறிக்கை வாசித்தல், பட்டம் மற்றும் பதக்கம் வழங்குதல், சிறப்பு அழைப்பாளா்கள் வாழ்த்துரை, பட்டதாரிகள் உறுதிமொழி ஏற்றல் உள்ளிட்ட நிகழ்வுகள் இதில் இடம் பெறுகிறது. நிகழ்ச்சிகள் யாவும் 12.30 மணிக்குள் நிறைவு செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.ஐ.டி. நிா்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT