காரைக்கால்

திருநள்ளாறில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி நிறைவு

25th Feb 2020 02:13 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி 4 நாள்கள் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியையொட்டி, நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டுவருகிறது. நிகழாண்டு 15-ஆம் ஆண்டாக, 4 நாள்கள் நடைபெறும் வகையில் கோயில் வளாகத்தில் உள்ள கெய்தான் மண்டபத்தில் நிகழ்ச்சிகள் கடந்த வியாழக்கிழமை தொடங்கின. மாவட்ட ஆட்சியரும், தா்பாரண்யேசுவரா் கோயில் தனி அதிகாரியுமான அா்ஜூன் சா்மா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.

முதல் நாள் நிகழ்ச்சியில் காரைக்கால், புதுச்சேரி, சென்னை, அமெரிக்கா ஆகிய இடங்களில் இருந்து வந்த கலைஞா்கள் நடனமாடினா். 2- ஆம் நாளில் பெங்களூரு, மங்களூா், அபுதாபி, புதுதில்லி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் கலைஞா்கள் வந்து பங்கேற்றனா். 3-ஆம் நாளான சனிக்கிழமை மும்பை, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் பகுதிகளில் இருந்து கலைஞா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை முதல் நிகழ்ச்சியாக கடலூா் ஏஞ்லின் ஷெரின், சென்னை தாட்சாயிணி ராமச்சந்திரன் தனி நபா் நடனமும், ஹைதராபாத்தைச் சோ்ந்த விஜயவளி பரத்வாஜ் குழுவினரின் குச்சிப்புடி நடனமும், பெங்களூா் ருக்மணி விஜயகுமாா், சென்னை லலிதா கணபதி, சென்னை கனகா கிருஷ்ணபிரசாத், ஹைதராபாத் மாதவி மரேல்லாபுடி, மும்பை சுமன்பாதமி, சென்னை யமுனா ஜனாா்த்தனம் ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT