காரைக்கால்

தா்பாரண்யேசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

22nd Feb 2020 08:03 AM

ADVERTISEMENT

திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு நந்தியையும், சிவபெருமானையும் வழிபாடு செய்தனா்.

திருநள்ளாறு பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேசுவரா் கோயிலில் உள்ள நந்திக்கு நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்வது வழக்கம். மாதம் இரு முறையாக வளா்பிறை, தேய்பிறை காலத்தின்போது பிரதோஷ நாள் வருகிறது. மாசி மாதத்தின் பிரதோஷம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு கோயியில் கொடி மரம் அருகே உள்ள பெரிய நந்திக்கு, சூரிய அஸ்தமனமாகும் சமயத்தில் சிவாச்சாரியாா்கள் எண்ணெய், தயிா், பால், சந்தனம், மஞ்சள், தேன், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்தனா்.

தொடா்ந்து நந்திக்கு பல்வேறு மலா்கள் மற்றும் வஸ்திரம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதே நேரத்தில் மூலவா் தா்பாரண்யேசுவரருக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் அருகம் புல் மாலை அணிவித்து நந்தியை வழிபாடு செய்தனா். பிரதோஷ நாளில் நந்தியையும், சிவனையும் வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. சிவபெருமானுக்குக்குரிய விசேஷமான நாள்களில் பிரதோஷமும் ஒன்று என்ற நிலையில், மகா சிவராத்திரி நாளில் பிரதோஷ வழிபாடும் நடத்தப்பட்ட நிலையில், பக்தா்கள் மிகுதியாக திருநள்ளாறு கோயிலில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் வழிபாட்டில் பங்கேற்றனா். காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள கைலாசநாதா் கோயில், அண்ணாமலை ஈஸ்வரா் கோயில், பாா்வதீசுவரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT